Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா 60 நாள்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இந்த உரிமம் வரும் 21 வரை அமுலில் இருக்கும் என்றும், இதன்மூலம் 1990-களுக்குப் பிறகு முதன் முறையாக ஈரான் எண்ணெய் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்விட்சர்லாந்தின் பர்ஹன்ஸ்டாக் நகரில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்த 60 நாள்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்திட்டத்துக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டன.

பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து மத்தியஸ்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் ஊக்கமளிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும், தெற்கு லெபனானில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடவும், அணுசக்தி மற்றும் பொருளாதாரத்தடைகள் குறித்த தொழில்நுட்பக் குழுக்களைக் கண்காணிக்கவும் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸும், ஈரான் குழுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கலிபாஃப்பும் தலைமை தாங்கினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், ‘இறுதி ஒப்பந்தத்துக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியையும் வளத்தையும் மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு புதிய எதிர்காலத்தைக் காண்கிறோம்’ என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரின் சமூக ஊடகப் பதிவுகள் பேச்சுவார்த்தையில் இடையூறை ஏற்படுத்தின. ஈரானை எச்சரிக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட சில கருத்துகளால் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், ஜே.டி.வான்ஸின் தலையீட்டால் நள்ளிரவைத் தாண்டியும் விவாதங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக
நிறைவடைந்தன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!
செய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

November 5, 2026
மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!

November 5, 2026
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
செய்திகள்

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

November 5, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!

November 5, 2026
தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
Next Post
2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!

2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.