Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

3 months ago
in செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், செம்மணி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை வெளிக்கொணருவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காணும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தனது நடுநிலைத் தன்மையையும் நீதித்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு