Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

மத்திய கிழக்கு போருக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவிக்கையில், இன்று (15) காலை இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறினார்.

நேற்று (14) மாலை 5.10 மணிக்கு யூ.எல்.-229 (UL-229) விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், மாலை 6.36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் புறப்பட்டிருந்தன.

A321neo ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்கள் மத்திய கிழக்கு வலயத்தை அண்மித்தபோது, பாதுகாப்பு நிலைமை காரணமாக குவைத் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இரண்டு விமானங்களும் அப்பகுதிக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டு பறந்த பின்னர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக பல சர்வதேச விமானங்களும் தங்களது பயணங்களில் தாமதம் அல்லது பாதை மாற்றங்களை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்
செய்திகள்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

October 13, 2026
இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
Next Post
கிழக்கு மாகாண கை பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு பாடசாலைகள் சாதனை!

கிழக்கு மாகாண கை பந்து (Handball) போட்டிகளில் மட்டக்களப்பு பாடசாலைகள் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு