Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

3 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடர்ந்த கானகப் பாதைகள் வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் முதல் குழுவினர் இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்தனர்.

கடந்த 10ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ் ஓடை ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் பாதயாத்திரைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட பலர், அடர்ந்த காடுகள், கரடுமுரடான மலைப் பாதைகள், சேறு, முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகள் மற்றும் கிரவல் வீதிகளைக் கடந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி கானகப் பாதையிலும் வழிபாடுகளை மேற்கொண்ட பக்தர்கள், கதிர்காமம் வந்தடைந்த பின்னர் ஆலயத்தில் விசேட கூட்டு வழிபாடுகளில் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா பெரஹரா இன்று இரவு நடைபெறவுள்ளது.

15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவின் நிறைவு நிகழ்வாக, எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான கதிர்காம ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

October 13, 2026
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!
செய்திகள்

கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

October 13, 2026
அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்
செய்திகள்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

October 13, 2026
Next Post
‘சாவடி’ திரைப்படத்தின் 300ஆவது நாள் விழா மற்றும் விருது வழங்கல் வைபவம் கோலாகலம்!

'சாவடி' திரைப்படத்தின் 300ஆவது நாள் விழா மற்றும் விருது வழங்கல் வைபவம் கோலாகலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு