Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரி செலுத்துவத்தை தவிர்க்கும் தரப்பினருக்கு அரசு எச்சரிக்கை

வரி செலுத்துவத்தை தவிர்க்கும் தரப்பினருக்கு அரசு எச்சரிக்கை

9 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2026 ஜூன் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இணங்கத் தவறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதது உள்ளிட்ட செயல்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும். அந்த அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைபாடுகளைச் சரிசெய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.அந்த 30 நாட்களுக்குள் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றமாகப் பதிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தச் சட்ட ஏற்பாடுகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை மட்டுமே குறிவைத்து அமுல்படுத்தப்படுகின்றன என்றும், சட்டத்திற்கிணங்க ஒத்துழைப்பு வழங்கும் வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் முட்டை விலை உயர்வு ;வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42
செய்திகள்

நாளை முதல் முட்டை விலை உயர்வு ;வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42

July 19, 2026
டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்
செய்திகள்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

July 19, 2026
செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?

July 19, 2026
அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்
செய்திகள்

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

July 19, 2026
பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்
செய்திகள்

பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்

July 19, 2026
இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்
செய்திகள்

இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்

July 19, 2026
Next Post
பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு