அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விலையை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மக்காச்சோள தட்டுப்பாடு, கோழித் தீவனப் பிரச்சினைகள் மற்றும் முட்டை உற்பத்தி 20–30% வரை குறைந்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகளிடம் பலமுறை அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.








