இலங்கையின் தினசரி பால் தேவையில் 43 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பால் உற்பத்தியை 410 மில்லியன் லிட்டரிலிருந்து 1,200 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிக்கவெரட்டிய கால்நடை வளர்ப்புப் பண்ணையை மேம்படுத்துவதற்காகவும் ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் உயர்தர கால்நடைகளை உற்பத்தி செய்யும் மையப் பண்ணையாக அது மாற்றப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பால் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.







