பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (28) பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








