அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவின் பொல்வத்தை பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய பெண் ஒருவர் விசேட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை இங்ஹினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








