Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் சட்டத்துக்கமைய நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும், நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் அல்லது விசாரணைகளில் எந்தவொரு வகையிலும் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. “நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள்; இருப்பினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும் நிறுவப்பட்ட நீதித்துறை மூலமாகப் பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்” என்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
செய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

November 9, 2026
மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
செய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!

November 9, 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
Next Post
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு