மாத்தறை ஹிரிகெட்டியாவில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை உடனே அகற்றுமாறுகோரி அப் பகுதி மக்களும், பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையான அனுமதிகள் மற்றும் முறைமைகள் இல்லாமல் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும்இ குறித்த சபாத் இல்லத்தின் இருப்பு உள்ளூர் சமூகத்திற்குள் நல்லிணக்கத்தைப் பாதிப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தில் பங்கேற்ற பௌத்த துறவிகள் மற்றும் பிரதேசவாசிகள் அடங்கிய குழு ஒன்று, அந்த சபாத் இல்லத்தின் சட்டப்பூர்வத்தன்மையை விசாரிக்கவும், தேவையான அனுமதிகள் இல்லாமல் அது செயல்படுவது கண்டறியப்பட்டால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.








