Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு மிகவும் விரைவான, வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தேசிய கட்டமைப்பு குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய ஒட்டுமொத்தப் பங்களிப்பையும் அடையாளம் கண்டு, அதில் டிஜிட்டல் அமைப்பில் சேர்க்கக்கூடிய மற்றும் சேர்க்க முடியாத சேவைகள் எவை என்பதை வகைப்படுத்துமாறும், தற்போதுள்ள அமைப்புகளின் மூலம் அந்த அனைத்துச் சேவைகளும் உள்ளடங்குகின்றனவா என்பதைப் பரிசீலித்துப் பார்க்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார். 

வெவ்வேறு நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படும் வேறுபட்ட அமைப்புகளுக்குப் பதிலாக, முழு அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரே தேசிய அமைப்பை உருவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மேலும், தற்போது செயற்பாட்டிலுள்ள அமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய அமைப்பை மேலும் அபிவிருத்தி செய்யும் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரிப் பணங்கள் செலுத்துதல், கலப்பு வருமானங்கள் (விளம்பரப் பலகை கட்டணங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல்), கடை வாடகைகள், நீர் விநியோகக் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வழிமுறைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. 

குறிப்பாக GovPay போன்ற அமைப்புகளை இதன் மூலம் மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டதுடன், தற்போது பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டம் வரை சேவைகளைப் இணைக்கும் செயல்முறையின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. 

தற்போது பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நெல் கொள்முதல் மற்றும் ‘டித்வா’ பேரிடர் நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வெற்றிகள் மற்றும் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து வசதிகளுடனும் கூடிய ஒரு மாதிரியாக (module) இந்த டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

அத்துடன், அரச அதிகாரிகள் நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வுபெறும் வரையிலான ஒட்டுமொத்த செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “GovHR” டிஜிட்டல் அமைப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

September 29, 2026
Next Post
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.