2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கமைய, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்ட 5,530 மாணவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான நிதியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.







