பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) பெல்லன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்ட குறித்த தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








