22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது இந்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.
மேலும், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.








