Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!

துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (18) அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்ட காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், சமூக ஊடகங்கள் ஊடாகவும் தனக்கு நீதி கோரியிருந்தார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பணியகத்திற்கு சென்றிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
Next Post
வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!

வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.