Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலாலி வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்போது, காலாவதியான சாக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வர்த்தக நிலையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, குறித்த வர்த்தக நிலையம் இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தமை தொடர்பான முற்குற்றம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன், 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு அறிவிக்க உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
Next Post
தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

தலவாக்கலையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.