Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் காணியை முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து அவரது பிணைத்தொகையைப் பறிமுதல் செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான பஸில் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் முன்னிலையாகாததற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காமல் தொடர்ந்து மன்றில் ஆஜராகத் தவறி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவருக்காக பிணையில் கையொப்பமிட்ட மூன்று பிணையாளர்களுக்கும் அபராதம் விதிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னதாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணையை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

October 4, 2026
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
Next Post
செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.