Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

2 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் நேற்று (19) அங்கு சென்றிருந்த போதிலும், அரசாங்கத்திடமிருந்து உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் புதைகுழிப் பகுதிக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 56ஆவது மற்றும் இறுதி நாளான நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

மதிய உணவு இடைவேளையின்போது கனேடியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள் செல்ல வேண்டுமாயின், உரிய அரச அனுமதியைப் பெற்று பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற வேண்டிய நடைமுறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனேடியத் தூதரகம் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான அனுமதியை கோரியிருந்ததாகவும், அதற்கான அரச அனுமதி கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயில் வரை சென்ற கனேடியத் தூதரகப் பிரதிநிதிகள், புதைகுழிப் பகுதிக்குள் செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு