Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை இல்லாது ஒழித்து தருமாறு கோரி திராய்மடுவில் நேற்று சனிக்கிழமை (03) மாலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டையடுத்து நேற்று மாலை 5.00 மணிக்கு திராய்மடுவில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து இந்த சட்டவிரோத மதுபான விற்பனையால் சிறுவர்களின் கல்வி பாதிப்படைவதனால் இந்த வியாபாரத்தை முற்றாக பொலிசார் ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் கருத்துதெரிவிக்கையில்,

”இந்த சட்டவிரோத வியாபாரிகளுடன் சில பொலிசாருக்கு தொடர்பு உள்ளது எனவே இதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தால் கிராமமே அழியும் எனவே சர்வதேச மது ஒழிப்பு தினமான இன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து கிராமத்தை பாதுகாத்து தரவும்.

சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் கைகளை பிடித்து இழுத்து ஒரு இலட்சம் தருவதாக அட்காசம் புரிந்து வருகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக கொக்குவில் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்தும் பொலிசார் கசிப்பு வியாபாரி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பொலிசாரிடம் இருந்து இந்த கிராமத்தை ஜனாதிபதி பாதுகாத்து தருமாறு கோஷங்கள் எழுப்பி, சுலோகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் மாலை 6.00 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!
உலக செய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

November 18, 2026
வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

November 18, 2026
மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது
காணொளிகள்

மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

November 18, 2026
ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!

November 18, 2026
மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

November 18, 2026
குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
Next Post
நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.