இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.








