இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி தினம் இன்றாகும் (26).
ரபி உல் அவ்வல் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் இந்நாளில், நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகள் நினைவுகூரப்படுகின்றன.
மனிதநேயம், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் உள்ளிட்ட நற்பணிகளை மேற்கொள்வதும் இந்நாளின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.







