ஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (Pims) மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை (26) தெரிவித்தனர்.
இச்சம்பவம் நடந்தபோது அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் 16 குழந்தைகள் இருந்தனர்; அவர்களில் ஒருவர் மட்டுமே காப்பாற்றப்பட்தாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகரில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையின் பராமரிப்புப் பிரிவில் இருந்த குளிரூட்டி (AC) கம்ப்ரஸர் வெடித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 6:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.







