இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்ரா பத்மே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் இன்று உயர் பாதுகாப்பு கொண்ட பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகளில் 8,841 அழைப்பு விபரங்கள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புகள் மற்றும் 5,039 காணொளிகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 9 அரசியல்வாதிகள், 7 நடிகைகள் மற்றும் 20 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







