Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
Next Post
வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு