வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நாத்தாண்டிய, மதகொட பிரதேசத்தைச் சேர்ந்த எம். எம். உமேஷ் என்ற கைதி, அங்கிருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைச்சாலை அதிகாரியின் (ஜெயிலர்) மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியின் மேலாளரான சிறைச்சாலை அதிகாரி, கைதிகளைப் பணியில் அமர்த்திவிட்டு மதிய உணவிற்காகத் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற சமயம் பார்த்து, அங்கிருந்த சாரத்தை அணிந்துகொண்ட சந்தேகநபர், சாவி பொருத்தப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரியின் மோட்டார் சைக்கிளைத் திருடி லெஸ்லி ரணகல மாவத்தை வழியிலுள்ள வாயில் ஊடாகத் தப்பிச் சென்றுள்ளார்.







