Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் இலங்கை பெற்றுக்கொண்ட மொத்த ஏற்றுமதி வருவாய் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீத வளர்ச்சியாகும்.

மொத்த ஏற்றுமதி வருவாயில் சரக்கு ஏற்றுமதிகள் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சரக்கு ஏற்றுமதி மூலம் 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.05 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே, சேவை ஏற்றுமதித்துறையும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2026 ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி மூலம் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.02 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டின்படி, 2026 ஜூலை மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீத சரிவாகும்.

அதேவேளை, சேவை ஏற்றுமதி 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.75 சதவீத வளர்ச்சியாகும்.

இதன் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.63 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

October 16, 2026
Next Post
தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு