Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (01) காலை 10.30 மணியளவில் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும், எதிர்பாராத விதமாக தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் நேற்று மாலை 6 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்
செய்திகள்

மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்

October 17, 2026
பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்
செய்திகள்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்

October 17, 2026
இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு
செய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

October 17, 2026
சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து
செய்திகள்

சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து

October 17, 2026
இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
உலக செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

October 17, 2026
Next Post
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு