இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முதல் எட்டு மாதங்களில் 1,852.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த வருமான இலக்கை விட 28.5 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, ஒகஸ்ட் மாதத்திற்காக 190.3 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாதத்தில் 219.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களம் 2,551 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சுங்க வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சுங்க வருமானம், அரசாங்கத்தின் வருவாய் திரட்டலில் சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.








