நாஃப்தா (Naphtha) மற்றும் எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு லீற்றர் நாஃப்தாவின் விலை 210 ரூபாவிலிருந்து 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து 38 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







