இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பொதுமக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, 1,750 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள் இன்று (05) முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வருகின்றன.







