கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 54 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.








