கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இன்று (08.09.2026) காலை இடம்பெற்ற விபத்தில், உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் எரிவாயு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வாகனத்தின் பின்னால் மோதியது. இதைத் தவிர்ப்பதற்காக சீமெந்து லொறியின் சாரதி மேற்கொண்ட முயற்சியின்போது, லொறி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, பாரிய உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து, பின்னால் வந்த மற்றுமொரு லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








