வாகரை பணிச்சங்கேணி கடற்பகுதியில் கரைவலை இழுவைப் படகு ஒன்று நேற்று (10) மாலை கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தமது அன்றாட மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கடலில் ஏற்பட்ட கடும் காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் தாக்கம் காரணமாக குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமது மீன்பிடி உபகரணங்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்திலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.








