Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

50 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ் உற்சவத்தில் உற்சவ நிகழ்வுகள் விநாயகர் வழிபாடு மற்றும் சாந்தி பூசைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு பூசைகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றதுடன், தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

செப்டெம்பர் 8ஆம் திகதி 2ஆம் நாள் திருவிழாவும், 9ஆம் திகதி 3ஆம் நாள் திருவிழாவும், 10ஆம் திகதி 4ஆம் நாள் திருவிழாவும், 11ஆம் திகதி 5ஆம் நாள் திருவிழாவும் நடைபெறுகின்றன.

அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி 6ஆம் நாள் திருவிழாவும், 13ஆம் திகதி 7ஆம் நாள் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து செப்டெம்பர் 16ஆம் திகதி வைரவர் பூஜையும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உற்சவ காலத்தில் விசேட யாக பூசைகள், வசந்த மண்டப பூசைகள், வீதியுலாக்கள் உள்ளிட்ட சமய நிகழ்வுகளுடன் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் சமய சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.

உற்சவ நிகழ்வுகளில் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு விக்ன விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உற்சவ காலத்தில் ஆலயத்திற்கு பூக்கள், பூமாலைகள் மற்றும் அபிஷேக திரவியங்களை பக்தர்கள் வழங்கி உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உற்சவ கால பிரதம குருவாக சிவஸ்ரீ சிவநேச லவகுமார குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் சமய நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் குழுவினரின் மங்கள வாத்திய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!
செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

September 11, 2026
கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ
செய்திகள்

கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா
செய்திகள்

இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா

September 11, 2026
இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!
செய்திகள்

இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

September 11, 2026
சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!

September 11, 2026
Next Post
கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு