Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள்

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் களுகங்கையின் குடா கங்கை பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் அடுத்த 24 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி எலபாத பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக பாயும் ஹங்கமு ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்துகள் செல்லும் இரண்டு பிரதான வீதிகள், கிளை வீதிகள், வீடுகள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

எலபாத, கரன்கொட, கினிஹிரிய, திமியா, தம்புலுவன, கஹவத்தை ஊடாக கலத்துர பிரதான வீதி கரங்கொடை பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அத்துடன் இரத்தினபுரி ஹங்கமுவ சந்தி ஊடாக கரவிட்ட பிரதான வீதியும் இரத்தினபுரி ஹங்கமுவ சந்தி ஊடாக படஎந்திரிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பேருந்துகள் உட்பட அனைத்து வாகன போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இன்று காலை களுகங்கையின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும் இரத்தினபுரி, நீரல்கம பிரதான வீதி ஏத்தோயா பிரதேசம் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும், கிளை வீதிகள் மற்றும் தாழ்வான நிலங்கள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதாலும், வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும் பேருந்துகள் இயங்கவில்லை எனவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, ஜிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை வரை பத்தேகம நீர் மானி 4.57 ஆக பதிவாகியுள்ளது.

பத்தேகம உடுகம வீதி, நாகொட குருபனாவ வீதி, பத்தேகம தொடம்கொடை வீதி, அகலியா வீதி மற்றும் பத்தேகம, அகலியா, நாகடை, உனன்விட்டிய, தவலம, ஹினிதும போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர் மழை காரணமாக பண்டாரகம அட்டுலுகம கிம்மாந்துடாவ வீதி மற்றும் கொலமதிரிய கிம்மாந்துடாவ வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அந்த வீதிகளில் பயணிக்கும் மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கிரம ஓயா நிரம்பி வழிவதால் தங்காலை பலதுடுவ வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

மேலும், ஹக்மன பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்மன தெவலேகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே தப்பிச் செல்லும் நிலை என்றால் நாட்டு மக்களின் நிலை என்ன?; சாணக்கியன் எம்.பி கண்டனம்!

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே தப்பிச் செல்லும் நிலை என்றால் நாட்டு மக்களின் நிலை என்ன?; சாணக்கியன் எம்.பி கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.