Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் அரசுக் கட்சி!

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் அரசுக் கட்சி!

3 years ago
in செய்திகள்

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தனது பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுமளவுக்கு, அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றுக்கு தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை.9.30 மணிக்கு, கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டனப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகப் பகுதியான குருந்தூர்மலையின் இருப்பையும், அங்கு தமிழர்கள் வழிபாடியற்றும் உரித்தையும் நிலைநிறுத்தியதற்காகவும், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு அனுமதித்ததற்காகவும் சிங்கள பேரினவாதத்தால் பழிவாங்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்ட இந்நிலை, தமிழினம் சார்ந்து சிந்திக்கின்ற, இனத்தின் இருப்பை நிலைநிறுத்த நியாயத்தின் பாற்பட்டு கடமையாற்றுகின்ற இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நீதியின் செங்கோலை, அதிகாரத் தரப்புகளுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் சாதகமாக வளைக்க மறுத்ததற்காக ஒரு தமிழ் நீதிபதிக்கு இந்த நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால், இந்த நாட்டின் சிறுபான்மை இனமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இருப்பு எவ்வளவு தூரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்பது பற்றி சர்வதேச சமூகத்தின் கவனத்தைக் கோரும் வகையில் இக்கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

இனத்தின் இருப்புக்காகப் பதவி துறந்திருக்கும் நீதிபதிக்காக சர்வதேசத்தின் நீதியைக் கோரத் தவறுவது, எங்கள் இனத்தின் இருப்பை இன்னும் வலுவிழக்கச் செய்யும் என்பதை உணர்வோம், இணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
நபி பிறந்த நாளில் ஈவிரக்கமின்றி தாக்குதல்; 52 பேர் பலி!

நபி பிறந்த நாளில் ஈவிரக்கமின்றி தாக்குதல்; 52 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு