சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவியின் பெயர் மனோஜா எனக் குறிப்பிட்டு, ராஜங்கனை சுத்தாநந்த தேரர் வெளியிட்டுள்ள கடுமையான கருத்துக்கள் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலத்தில் தனது காவி உடை பலவந்தமாகக் களையப்பட்டபோது தனக்காகக் குரல் கொடுக்க எவரும் முன்வரவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போது மதுபோதை மற்றும் ஒழுக்கக்கேடுகளுடன் தொடர்புடைய பிக்கு ஒருவருக்காக ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், தற்போதைய நாட்டின் நற்பேற்றிற்காகத் தோற்றம் பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை எவ்விதத் தடைகளுமின்றி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனுமதிக்குமாறு நாட்டு மக்களிடம் அவர் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.








