Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

1 hour ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள விமான நிலையத்தைப் பாதித்த பாதுகாப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்துக்கான அனைத்து விமான சேவைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காகவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை வணிக ரீதியான விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பாதுகாப்பானது என மதிப்பிடப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஒக்டோபர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கைக்கும் ரியாத்துக்கும் இடையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் தமது விமானப் பயணங்களின் தற்போதைய நிலைவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாடுகளிலிருந்து +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொள்ளலாம். அத்துடன், +94 74 444 1979 என்ற வாட்ஸ்அப் இலக்கம், தமது பயண முகவர்கள் அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில், பயணிகள் தமது பயணத் திட்டங்களை உறுதிப்படுத்திக்கொண்டு விமான நிலையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

October 11, 2026
“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்
செய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

October 11, 2026
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
செய்திகள்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

October 11, 2026
2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
Next Post
“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு