தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் தொற்றுக்கு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் பேராசிரியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்புளுவென்சா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் அதற்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







