Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குவைத்தில் வீட்டு சாரதியாகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தின் அல் அர்தியா பகுதியில், ஃபர்வானியா மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக Kuwait Times செய்தி வெளியிட்டுள்ளது.

கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், தனது பணியாளரின் குடும்பத்தினரை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவர் போதைப்பொருட்களை விநியோகித்ததாகக் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த அதிகாரிகள், அவர் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது 469.1 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், 0.7 கிராம் கஞ்சா, மின்னணு எடைமானி மற்றும் 285.950 குவைத் தினார் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் உள்ள நபர்களுக்கு மொத்தமாக 6,573 குவைத் தினார் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர், போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகவும், குவைத்துக்கு வெளியே உள்ள ஒருவருடன் இணைந்து கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளின்போது ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வீட்டு வாகனங்கள் மற்றும் குடியிருப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்குமாறு முதலாளிகளுக்கு குவைத் உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்
செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்

October 11, 2026
Next Post
திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு