Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் 11 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஏறாவூரில் 11 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

46 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 37 வயதுடைய நபருக்கு 25 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சம்பவம் 2020ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நபர் கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி குற்றவாளியாகக் காணப்பட்டார். இதையடுத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், வெள்ளிக்கிழமை (09.10.2026) தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார்.

இதன்படி, சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டுகளும், பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்துக்கு 15 ஆண்டுகளுமாக மொத்தம் 25 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், அதனைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடித்த மஹிந்தவே அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்; திஸ்ஸ குட்டியாராச்சி
செய்திகள்

புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடித்த மஹிந்தவே அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்; திஸ்ஸ குட்டியாராச்சி

October 12, 2026
ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 11 பேர் காயம்!
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 11 பேர் காயம்!

October 12, 2026
நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு
செய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

October 11, 2026
ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!
செய்திகள்

ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

October 11, 2026
AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 11, 2026
சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
Next Post
ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 11 பேர் காயம்!

ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 11 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு