கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா நேற்று முன்தினம் மாலை தகவு திறத்தலுடன் ஆரம்பமானது.
நேற்றைய நவராத்திரி ஆரம்பமாகியுள்ள நிலையில் 09தினங்கள் முப்பெரும்தேவிகளுக்கான தினமாக சிறப்பாக நடைபெறவுள்ளதுடன் பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் சக்தி விழாவும் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
அம்பாள் எழுந்தருளல் செய்யப்பட்டு தேவாதிகள் ஆடிவர பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர வடபத்திரகாளியம்மன் ஆலயம் வரையில் ஊர்வலமாக அம்பாள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆலயத்தில் கதவு திறத்தல் பூஜைகள் நடைபெற்றன.










உற்சவகால பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ குமாரலிங்கம் பூசகர் தலைமையிலான பூசகர்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து திருக்கதவு திறக்கப்பட்டு சக்தி விழா ஆரம்பமானது.
ஞாயிற்றுக்கிழமை மாலை அன்னையின் வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் இன்று திங்கட்கிழமை அன்னையின் ஊர்காவல் உலா நடைபெறும்.
நாளை செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகம் நடைபெற்று அன்று மாலை நோற்பு கட்டும் நிகழ்வும் கடல்குளிப்பு உற்சவமும் நடைபெறும்.
புதன்கிழமை (14)காலை அன்னையின் அற்புத நிகழ்வான தீமிதிப்பு திருச்சடங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








