வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.







