Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும், வழக்கை விசாரிப்பதற்கான நீதியரசர்கள் குழாம் உரிய முறையில் அமைக்கப்படாததால் மேலதிக வாதங்களைத் தொடர முடியவில்லை.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறி, ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அரச பதவியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அரசியலமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில், அர்ச்சுனா தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என மனுதாரர் தரப்பு வாதிட்டுள்ளது.

எனினும், சம்பளமின்றிப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்ததால், அர்ச்சுனாவை அரச அதிகாரியாகக் கருத முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன்னதாக வாதிட்டிருந்தனர்.

இதற்கிடையில், அர்ச்சுனா சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இனிமேல் முன்னிலையாகமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பியின் புதிய பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணியான கௌசல்யா நரேந்திரன், அவர் சார்பில் புதிய சட்டத்தரணிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் சட்டத்தரணிகளான என்.கே. அசோக் பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

அர்ச்சுனா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது அரச பதவியில் இருந்தாரா, அதன் அடிப்படையில் அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவராக இருந்தாரா என்பதே இந்த வழக்கின் முக்கிய சட்டப் பிரச்சினையாக உள்ளது.

இந்நிலையில், வழக்கின் மேலதிக வாதங்களை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
Next Post
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு