Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திமிலைதீவு பகுதியில் கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றது.

நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கனரக வாகனங்களின் கட்டுபாடற்ற போக்குவரத்தை நிறுத்து, மனித உயிர்களை காப்பாற்று, உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காதே இப்போதே நடவடிக்கை எடு, பாதுகாப்பற்ற போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து, உயிரை காப்பது அரசின் கடமை, பாதுகாப்பை உறுதிப்படுத்து, மாணவர்கள் செல்லும் பாதையில் மரண வாகனங்கள் வேண்டாம், அதிகாரிகளே மக்களின் குரலை செவிமடுங்கள், மக்களின் உயிருடன் விளையாடாதே, உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி வேண்டும், சட்டவிரோத மண் அகழ்வை உடன் நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எனும் தலைப்பிலான மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
Next Post
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு