Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளைப் போன்று மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என்றும், இது தொடர்பாக முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்ன உண்மைக்கு புறம்பான கூற்றுகளைக் கூறி வருவதாகவும் மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (12) மல்வத்தை பீடத்தின் பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன் போது பீடாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கலந்துரையாடலின் போது, மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) அமைப்பு கதிர்காம திருவிழா மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை மீது குண்டு வீசியதாகக் கூறப்படுவதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்; மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டு வீசியதாகக் கூற இயலாது.

ஸ்ரீ தலதா மாளிகையைப் பாதுகாத்து வந்த பொலிஸாருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் வழங்கப்பட்டது. இதன்போது துப்பாக்கிகளை அவர்கள் பறித்துக்கொண்டார்கள். முன்னணியில் இருந்த பொலிஸாரின் துப்பாக்கிகளே பறிக்கப்பட்டன. எனினும் விடுதலைப் புலிகளைப் போன்று குண்டுகளை வீசி மக்கள் விடுதலை முன்னணி தாக்குதல் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள் திருடப்பட்ட ஒரு சம்பவத்தையே பீடாதிபதி இச்சந்திப்பில் நினைவு கூர்ந்தார். கூற்றுகளை முன்வைப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இல்லாதபோது சிலர் பொய்யான கூற்றுகளை முன்வைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.சிறையில் உள்ள தேரர்களை நீதிமன்றங்களில் எவ்வாறு ஆஜர்படுத்துவது என்பது குறித்தும் இதன் போது அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.இந்த சந்திப்பின் போது தேரர்களின் புனிதத்தன்மை குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பௌத்த மதத்திற்கு இழைக்கப்படும் தற்போதைய அவமதிப்புகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்
செய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

October 13, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

October 13, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
Next Post
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு