கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (12) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் வணிக வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 1 கிலோகிராம் 49 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களும், 43 மற்றும் 52 வயதுடைய இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








