Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்; ஜனாதிபதி அறிவிப்பு!

75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்; ஜனாதிபதி அறிவிப்பு!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதன் வருமான இலக்கு 30 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலைகளில் நிறுவனங்கள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், சில தனியார் நிறுவனங்கள் வருமானத்தை மட்டுமே கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும், அவை உரிய முறையில் விநியோகிக்கப்படாமை தவறான செயற்பாடு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச நிறுவனங்களால் குறிப்பிட்ட விலையில் எரிபொருளை வழங்க முடியும் என்றால், தனியார் நிறுவனங்களால் ஏன் அதே விலையில் வழங்க முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டித்தன்மையை அதிகரித்து எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய நிலைமை அந்த வாய்ப்பின் பயன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நகரங்களில் தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டுமே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.

இத்தகைய சவால்களைக் கருத்திற்கொண்டே, எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது!
செய்திகள்

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் கைது!

October 13, 2026
இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!
செய்திகள்

இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

October 13, 2026
யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்
செய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

October 13, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

October 13, 2026
விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்
செய்திகள்

விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

October 13, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு