Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அதிவேகமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கருத்திற்கொண்டு, மக்கள் மீது குறைந்தபட்ச சுமையையே சுமத்தி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக, ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், எரிபொருளுக்காக இதுவரை சுமார் 110 பில்லியன் ரூபாயை அரசாங்கம் திறைசேரி ஊடாக நிவாரணமாக வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 57 பில்லியன் ரூபாயும், இம்முறை 41 பில்லியன் ரூபாயும் திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

திறைசேரியால் தாங்கிக்கொள்ளக்கூடிய உச்ச வரம்புக்குச் சென்று மக்களுக்காக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகின் பல நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கையில், எமது அரசாங்கம் 41 பில்லியன் ரூபாயைச் செலுத்தி, எரிபொருள் விலை உயர்வின் சுமையை மக்கள் மீது நேரடியாகச் சுமத்தாமல் அதனைக் கட்டுப்படுத்தி வருகிறது.

உலக சந்தை விலை உயர்வுக்கு ஏற்ப நாமும் விரைவாகவும் பெருமளவிலும் விலையை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்திலும் நாங்கள் அதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக 57 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இம்முறையும் 41 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 4-5 மாதங்களுக்குள் சுமார் 100 பில்லியன் ரூபாயை அரசாங்கம் மக்கள் மீது சுமத்தாமல் தாங்கிக்கொண்டுள்ளது.

எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் திறைசேரியைச் சரியாக முகாமை செய்து, இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களின் வரிப் பணத்தின் மூலம் மக்கள் மீதான சுமையைக் குறைப்பதே எமது கடமையாகும். அதனை நாங்கள் செய்கிறோம். திறைசேரியால் தாங்கிக்கொள்ளக்கூடிய உச்ச வரம்பு வரை மக்களுக்காக நாங்கள் செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!
செய்திகள்

கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

October 13, 2026
அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்
செய்திகள்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

October 13, 2026
இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு